சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள்: ஆணையர்

சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா   கட்டுப்பாட்டு அறைகள்: ஆணையர்
X

ஆணையர் ககன்தீப் சிங் பேடி

சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு சிகிச்சை அளிக்கிறோம். வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களை களப்பணியாளர்கள் சந்தித்து உதவி கிடைப்பதை உறுதி செய்வார்கள் எனக் கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!