இயக்குனர் பாக்கியராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா உறுதி

இயக்குனர் பாக்கியராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா உறுதி
X

இயக்குனர் பாக்கியராஜ் அவரது மனைவி பூர்ணிமா 

இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக பாக்யராஜின் மகன் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனது பெற்றோருக்கு கொரனோ உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!