காங்கிரஸ் சார்பில் கொரோனா விழிப்புணர்வு தெருக்கூத்து

காங்கிரஸ் சார்பில்  கொரோனா விழிப்புணர்வு தெருக்கூத்து
X

இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் இடையே முகக்கவசம் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவர் அணி தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்

கோயம்பேடு சந்தையில் உள்ள அண்ணா தனி அங்காடி வளாகம் அருகில் இன்று, இரண்டாம் அலை கொரோனா தொற்று பரவும் அபாய நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவ அணி சார்பாக மக்களிடையே தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று கை கழுவுவது எப்படி என்றும் தடுப்பூசி செலுத்தி கொள்வதால் எந்த மாதிரியான நன்மைகள் ஏற்படும் என்றும் மக்கள் மத்தியில் தங்களின் நடிப்பின் மூலம் பச்சையப்பா கல்லூரி முன்னாள்

மாணவ INFINITE குழுவினர் தெருக்கூத்தில் நடித்துக் காட்டினர்.

இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவ பிரிவின் மாநிலத் தலைவர் நிர்மல் சந்த் ராஜு " கொரோனா இரண்டாம் நிலை தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும், 45 வயதிற்கு மேல் தற்போது தடுப்பூசியை அரசு மருத்துவமனையில் செலுத்தி கொண்டு வருகின்றனர். அதை தவறாமல் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் காய்ச்சல் வந்தால் மருத்துவர்கள் அதற்கான மாத்திரைகளை வழங்குகின்றனர் என்றார். தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றார். மேலும் நடிகர் விவேக்கின் முழு உடல் ஆரோக்கிய அறிக்கை பற்றி தெரியாமல் அதை நாம் கொரோனா தடுப்பூசியுடன் ஒப்பிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!