முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து வாழ்த்து

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து வாழ்த்து
X
உலக தமிழர் இதயங்களில் கலைஞர் போல் முக ஸ்டாலின் இடம் பிடிப்பார் - திருநாவுக்கரசர் பெருமிதம்

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பின்தங்கியுள்ள தமிழகத்தை முன்னெடுத்து சென்று தமிழ் மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் முக ஸ்டாலின் செய்வார் என்றும் தமிழகத்தின் சிறந்த முதல்வராக செயல்படுவார் எனவும் கூறினார். பின்பு முதல்வராக பதவியேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலைஞரை போல் உலக தமிழர் இதயங்களில் மு.க.ஸ்டாலினும் இடம் பிடிப்பார் என்றும் மாநிலங்களில் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது, மத்தியில் ஒரு கட்சி ஆட்சியில் இருப்பது என்பது கடந்த காலங்களில் இந்திய நாட்டின் ஜனநாயகத்தோடு சிறப்பம்சம் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!