மத்திய குற்றப்பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 29 போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

மத்திய குற்றப்பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 29 போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
X

சிறப்பாக பணியாற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால் வெகுமதியையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.

சென்னை மத்திய குற்றப் பிரிவில் மிக சிறப்பாக பணியாற்றிய 29 நபர்களுக்கு வெகுமதி அளித்து, பாராட்டு சான்றிதழ்களை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால் வழங்கினார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர் ஜவால் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :

கடந்த இரண்டு மாதத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பலவிதமான வழக்குகள் பதியப்பட்டது அதில் நிறைய ஆவணங்கள் பணம் பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக டில்லியில் இன்சூரன்ஸ் போலியான பெயரை வைத்து 19 லட்சம் வரை ஏமாற்றிய நபர்களை கைது செய்தனர்,

ஓடிபி நம்பர் மூலம் பணம் பறித்து ஏமாற்றியவர்களை கைது செய்துள்ளோம், அது குட்டி கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது செய்துள்ளனர், அசோக் குமார், காமாட்சி,ராஜவேல் ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டம் போட்டிருக்கிறது,

மேட்ரிமோனி மூலமாக நூதன முறையில் ஏமாற்றியவர்கள் கைது செய்திருக்கிறோம் இதுபோல தொடர்ந்து பல வழக்குகளை சவாலாகக் கையாண்டுள்ளனர் மேலும் இதுபோன்று செயல்படுவதற்கு உரிய வெகுமதி வழங்கப்படும்,

நடிகர் ஆர்யா வழக்கைப் பொருத்தவரை அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதற்காக நடிகர் ஆர்யா சந்தித்து நன்றி தெரிவித்தார்,

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பொருத்தவரை நீதிமன்றம் அறிவிப்படி காவல் துறை செயல்படும் சட்டத்தை மீறி செயல்படுபவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..

ஏன்ஜல் டிரேடர்ஸ் நிறுவனத்தின் 1.1/2 கோடிகள் ரூபாய் பொது மக்களை ஏமாற்றுபவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார் மேலும் முக்கிய நபர்களை தேடிவருகின்றனர் எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story