நாளை முதல் மீண்டும் வகுப்புகள் ஆரம்பம்

நாளை முதல் மீண்டும் வகுப்புகள் ஆரம்பம்
X

விரைவில் பள்ளிகள் திறப்பு

சட்டமன்ற தேர்தலுக்காக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்களுக்கு வகுப்புகளும் நடைபெறவில்லை. ஆனால் பொதுத்தேர்வு இருப்பதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடைபெறும், தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது.

அதன்படி மே மாதம் 3ஆம் தேதி +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதனிடையே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கூட நாளை முதல் +2 வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!