4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சி.எஸ்.கே அணிக்கு தமிழக முதல்வர் பாராட்டு
ஐபிஎல் போட்டியின் 14-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஐபிஎல் போட்டியின் 14-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களே அடித்து வீழ்ந்தது. சென்னை தரப்பில் டூ பிளெஸ்ஸிஸ் அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 86 ரன்கள் குவித்தாா். சென்னை கோப்பை வெல்வது இது 4-ஆவது முறையாகும். இதற்கு முன் 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் சென்னை சாம்பியனாகியுள்ளது. கடந்த சீசனில் மிக மோசமான வகையில் தோற்ற நிலையில், அதிலிருந்து மீண்டு தற்போது சாம்பியனாகி சாதித்திருக்கிறது சென்னை.
இதுகுறித்து தமிழக முதல்வர்; சிஎஸ்கே அற்புதமாக செயல்பட்டது. மன்னர்கள் மீண்டும் கர்ஜித்தனர். நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஒவ்வொரு சிஎஸ்கே வீரர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறத என்று தமிழக முதல்வர் அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu