முதல்வர் ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

முதல்வர் ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
X
சென்னையில் உள்ள புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

குன்றத்தூர் அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஏரியின் நீர்மட்ட நிலவரம் குறித்த விவரங்களை அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும் மழை பெய்தாலும் சாலைகளில் நீர் தேங்காத வகையிலும் ஏரி மற்றும் குளங்களில் மழை நீர் சென்றடையும் வகையிலும் முன்னேற்பாடுகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது, ஏரியில் நீர் திறப்பது பற்றி பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் ஏரியின் நீர்மட்ட நிலவரத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Tags

Next Story
how to bring ai in agriculture