சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகள்:ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகள்:ஸ்டாலின்  ஆய்வு
X

சென்னை மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்

மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையப்பணியை ஆய்வு செய்தார்

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகள் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகளைப் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னைக்கு அருகே வற்றாத நீராதாரங்கள் இல்லாத காரணத்தினால் சென்னைப் பெருநகரம் வடகிழக்குப் பருவ மழையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது.

வடகிழக்குப் பருவமழை பொய்க்கும் காலங்களில் நகரின் நீண்ட காலக் குடிநீர் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை அமைத்துள்ளது. இரண்டாவது நிலையமாக நெம்மேலியில் 805 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அன்றைய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் 23.2.2010 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு 2013ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இந்த நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தென் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளாகத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்குக் குழாய் கட்டமைப்புகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் வாயிலாக மக்களுக்கு வழங்கப்பட்டு, சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து, நெம்மேலியில் 1259 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்காக நடைபெற்று வரும் கடல் நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்திகரிக்கப்பட்ட நீர்தேக்க தொட்டி சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம் வடிகட்டப்பட்ட கடல் நீர்தேக்கத் தொட்டி மற்றும் உந்து நிலையம் காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறைச் சவ்வூடுப் பரவல் நிலையம் நிர்வாகக் கட்டடம், கசடுகளைக் கெட்டிப்படுத்தும் பிரிவு, செதிலடுக்கு வடிகட்டி போன்ற கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இத்திட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து, பல்லாவரம் வரை குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணிகளையும், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் வாயிலாகப் பெறப்படும் குடிநீர் மூலம் தென்சென்னைப் பகுதிகளான உள்ளகரம் புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை பல்லாவரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தடப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா