புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
X
மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அனைத்துத் துறை செயலர்களுடன் இன்று ஆலோசனை செய்தார். மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். அறிவிப்புகளை செயல்படுத்தும்போது வழக்குகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் முக்கிய பொறுப்பு.

சட்டசபையில் அமைச்சர்கள் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, துறை வாரியாக, மாதம் இரண்டு முறை நானே நேரடியாக ஆய்வு பணிகளை மேற்கொள்வேன் எனக் கூறியுள்னேன். ஒவ்வொரு அறிவிப்பையும் செயல்படுத்த கால அளவை நிர்ணயித்து அதற்குள் செயல்படுத்துங்கள்.

திட்டங்களின் நிலையை வாரந்தோறும் ஆய்வு செய்வேன். அறிவித்த திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களை சென்று சேர வேண்டும். ஒவ்வொரு துறையும் முன்னேற வேண்டும் இவ்வாறு கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்