கல்விக் கண் திறந்த காமராஜரை தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது: மு.க.ஸ்டாலின்

கல்விக் கண் திறந்த காமராஜரை தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது: மு.க.ஸ்டாலின்
X
பெருந்தலைவரின் தொண்டுள்ளம் கொண்டு பொதுவாழ்வில் செயல்படுவோம் என முதல்வர் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்

கல்விக் கண் திறந்த காமராஜரைத் தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய 'கர்ம வீரர்', 'கல்விக்கண் திறந்தவர்' என போற்றப்படும் முன்னாள் முதல்வர் காமராஜர், கடந்த அக். 02, 1975-ம் ஆண்டு காலமானார். காமராஜரின் நினைவு நாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருடைய சிலைக்கு மரியாதை செலுத்தியும், அவரை நினைவுகூர்ந்தும் வருகின்றனர். இந்நிலையில், காமராஜர் நினைவு தினம் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 02) தன் ட்விட்டர் பக்கத்தில், "எளிமையின் உருவம் - ஏழைப் பங்காளர் பெருந்தலைவர் காமராஜரின் நினைவுநாள்! கல்விக் கண் திறந்த அவரைத் தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது! பெருந்தலைவரின் தொண்டுள்ளம் கொண்டு பொதுவாழ்வில் செயல்படுவோம்!" என பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு