வன்னியர் இட ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பைல் படம்
அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
வன்னியர்கள் 10.5 சதவிகிதம், சீர்மரபினர் 7 சதவிகிதம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவிகிதம் சிறப்பு உள் ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சட்ட வல்லுநர், டிஎன்பிஎஸ்சியுடன் கலந்தாலோசித்து சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்தலாம். நடப்பாண்டு முதல் புதிய சிறப்பு ஒதுக்கீடு முறையில் தொழில்கல்வி உள்பட அனைத்து கல்வியிலும் சேர்க்கை நடைபெறும்.
பிப்ரவரி 26ம் தேதி முதல் சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu