முதலமைச்சர், நிதியமைச்சரை விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
As I am suffering from Valagappu" என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆரை கலாய்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டணி கட்சிகள் பற்றி மட்டுமே கவலை படுகிறாரே தவிர கூட்டு-பொறியியல் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 46-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மரியாதை செலுத்தினார். அங்கு இருந்த காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்:
ஊரக பகுதிகளில் தொழில் சாலைகள் அமைத்து தொழில் வளர்ந்தால் தமிழ்நாடு வளரும் என்று பல விஷயங்களை காமராஜர் முன்னெடுத்தார். தொழிற்சாலைகள் கட்டுவது, அணைகள் கட்டுவது கல்விக்கூடங்கள் கட்டுவது என அடிப்படையான விஷயங்கள் அவரின் சிந்தனையில் உதித்து தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசென்றார்.
திமுக கூட்டணியில் உள்ள தோழமை கட்சியின் கொடியை சில இடங்களில் ஏற்ற முடியவில்லை என்று சொல்கின்றனர். திருமாவளவன் போலீசாரை குறை சொல்கிறார் ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினை பற்றி பேசுவதில்லை. நண்பர் திருமாவளவன் வீரம் மிக்கவர் அவரின் வீரம் இப்போது எங்கே சென்றது என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ஜெயகுமார், மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பொரியல் கொடுக்க வேண்டும் என்று உள்ளது. ஆய்வின் போது ஏன் பொரியல் கொடுக்கவில்லை என்று அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் கேட்கவில்லை. தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்க குறிப்பில் கூட மதிய உணவில் மாணவர்களுக்கு பொரியல் கொடுக்க வேண்டும் என உள்ளது. ஜி.எஸ்.டி கூட்டத்தில் பங்கேற்க தனி விமானம் வேண்டும் என்றும் வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் கூறினார் என்று எனக்கு தகவல் வந்தது. அதில் பங்கேற்காமல் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu