சென்னை மாநகராட்சியில் இளம்வயது திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

சென்னை மாநகராட்சியில் இளம்வயது திமுக வேட்பாளர்  வேட்புமனு தாக்கல்
X

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் இளம் வயது திமுக வேட்பாளர் 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 136 வது வார்டில் இளம் வயது வேட்பாளராக நிலவரசி துரைராஜ் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

திமுக சார்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 136 வது வார்டில் 22 வயதுக்குட்பட்ட இளம் வேட்பாளராக நிலவரசி துரைராஜ் இன்று தனது வேட்பு மனுவை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

பின்னர் பேசிய அவர், தனது தந்தை 35 வருட காலமாக அரசியல் இருப்பதாகவும், மேலும் தமிழக முதல்வரை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு தாம் அரசியலில் களம் காணுவது அவர் தெரிவித்தார்.

மேலும் தனது வார்டுக்குட்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்