சென்னை: உலக குருதி கொடையாளர்கள் தினம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்ததானம்!

சென்னை: உலக குருதி கொடையாளர்கள் தினம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்ததானம்!
X

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்தானம் செய்த காட்சி.

உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்த தானம் வழங்கினார்.

உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு குருதி கொடை அளித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் தீபக் ஜாக்ப், கீழ்ப்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சாந்திமலர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!