சென்னை மாநகராட்சியில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு கடன் உதவி
அமைச்சர் சேகர் பாபு
சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடனுதவியை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சேகர் பாபு இணைந்து வழங்கினர்.
இந்நிகழ்வில் சென்னையில் உள்ள 719 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 10785 பேருக்கு 28.85 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.
மேலும் PM ஸ்வா நிதி திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் தொழில் புரிய ஏதுவாக 50 நபர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மேடையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு: .
மகளிர் சுய உதவி குழுக்கள் முன்னேற்றம் மற்றும் மறுமலர்ச்சி என்பது கலைஞரின் ஆட்சிக்காலம் என்பது என்றால் மிகையாகாது
கடந்த 10 ஆண்டு காலமாக சோர்ந்து கிடந்த இந்த மகளிர் குழுக்கள் தற்பொழுது முதலமைச்சரால் புத்துயிர் பெற்றதுள்ளது என்றார்.
கடந்த 13ஆம் தேதி கூட முதலமைச்சர் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்களுக்கு 2750 கோடிக்கு தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி தந்த பெருமை முதலமைச்சரை சாரும்
திமுக ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் ஆகியுள்ளன அதிலும் ஐந்து மாதங்கள் கொரோனாவிற்காக செலவழிக்கும் பட்டதாகவும் பெருமழை வெள்ளத்தால் தொடர்ந்து 35 நாட்கள் மக்களை முதல்வர் சந்தித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தின் சீர்கேட்டால் பொருளாதார பாதிப்பால் சென்னை மாநகராட்சியும் கடன் சுமையால் ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத சூழல் நிலவியது. இவைகள் அனைத்தையும் சமாளித்து கஜானா காலி. களஞ்சியம் காலி என்றாலும் தன்னுடைய நிர்வாகத்திறமை என்றும் காலியாக இருக்காது என்று முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார் என புகழாரம் சூட்டினார்.
ஆட்சிக்கு வந்த ஏழு மாதத்திலேயே மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2750 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் என்பது இந்தியாவிலேயே தமிழக முதலமைச்சர் போல வேறு யாரையும் பார்க்க முடியாது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu