ஊரடங்கில் காய்கறிகள் தடையின்றி கிடைக்க வேண்டும்- மு.க ஸ்டாலின் உத்தரவு

ஊரடங்கில் காய்கறிகள் தடையின்றி கிடைக்க வேண்டும்- மு.க ஸ்டாலின் உத்தரவு
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஊரங்கு காலங்களில் காய்கறிகள், பழங்கள் தடையின்றி கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர இருப்பதால் முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் தமிழக அரசின் கொரோனா நிவாரணத் தொகை மக்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்து விட்டதா என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்