தமிழகத்தில் 4 கூடுதல் எஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 4 கூடுதல் எஸ்பிக்கள் பணியிட மாற்றம்
X
தமிழகத்தில் 4 கூடுதல் எஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை : தமிழகத்தில் 4 கூடுதல் எஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில்,

* கோவை மாவட்ட தலைமையிடத்தில் இருந்து கூடுதல் எஸ்பி விஜய கார்த்திக் ராஜ் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும்,

* கள்ளக்குறிச்சி மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் கூடுதல் எஸ்பியாக இருந்த ரவிச்சந்திரன் கோவை மாவட்டம் தலைமையிடத்திற்கும்,

* திருப்பூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த கண்ணன் கரூர் மாவட்டம் தலைமையிடத்திற்கும்,

* மதுரை நகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த கிருஷ்ணமூர்த்தி திருப்பூர் மாவட்டம் தலைமையிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!