8 கலெக்டர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமைச் செயலர் இறையன்பு அதிரடி!
சென்னை: தமிழகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விடுமுறையில் சென்ற அன்சுல் மிஸ்ரா சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் தலைமைச் செயலர் வெளியிட்ட உத்தரவில், இடம்பெற்றுள்ள 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பின்வருமாறு,
1. நாகை ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சித்துறை பஞ்சாயத்து ராஜ் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. விழுப்புரம் ஆட்சியராக இருந்த அண்ணாதுரை வேளாண்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. வேலூர் ஆட்சியராக இருந்த சண்முகசுந்தரம் கூட்டுறவு வங்கி பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி சுற்றுலா வளர்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. திருப்பத்தூர் ஆட்சியராக இருந்த சிவன் அருள், பதிவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. கோவை ஆட்சியராக இருந்த நாகராஜன், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. அரியலூர் ஆட்சியராக இருந்த ரத்னா, சமூகநலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. திருவள்ளூர் ஆட்சியராக இருந்த பா.பொன்னையா, நகராட்சி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளா
பணியிடமாற்றம் செய்யப்பட்ட 20 பேர் பட்டியல்
1. பிரவீன் நாயர்- ஊரக வளர்சசி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர்
2. சுதன்- மாநில திட்டங்கள் துறை இயக்குநர்
3. அண்ணாதுரை- வேளாண்துறை இயக்குநர்
4. சண்முகசுந்தரம்- கூட்டுறவுத்துறை பதிவாளர்
5. சிவன் அருள் - பத்திரப்பதிவுத்துறை ஐஜி
6. நாகராஜன்- - நில நிர்வாக ஆணையர்
7. பொன்னையா- நகராட்சி நிர்வாக இயக்குநர்
8. சந்தீப் நந்தூரி - சுற்றுலாத்துறை இயக்குநர், சுற்றுலாத்துறை வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் பதவி வகிப்பார்
9. லட்சுமி பிரியா- தொழில்நுட்ப கல்வி இயக்குநர்
10. செல்வராஜ்- பேரூராட்சிகள் ஆணையர்
11. லதா- ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்
12. பிருந்தா தேவி- பட்டுவளர்ப்புத்துறை இயக்குநர்
13. வள்ளலார்- விவசாய மார்க்கெட்டிங் மற்றும் விவசாய வணிக கமிஷனர்
14. சரவண வேல்ராஜ்- நகர்ப்புற வளர்ச்சித்துறை இயக்குநர்
15. டி.ஜி.வினய்- சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குநராக
16. ஜெயகாந்தன்- சுங்கத்துறை கமிஷனர்
17. ரத்னா- சமூக நலத்துறை இயக்குநர்
18. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர்- அமுதவள்ளி
19. கந்தசாமி - பால் உற்பத்தித்துறை இயக்கநர். இவர் தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மேலாண் இயக்குநராகவும் பொறுப்பு வகிப்பார்.
20. பாஸ்கர பாண்டியன்- மாநில வளர்ச்சி கொள்கை கவுன்சிலின் உறுப்பினர் செயலர்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu