சுற்றுலாத் தலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் ஆய்வு

சுற்றுலாத் தலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் ஆய்வு
X

சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டு பணிகள் குறித்து அமைச்சர்கள் சேகர் பாபு, மதிவேந்தன் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் திருத்தலங்கள், சுற்றுலாத் தலங்களில் வருகை புரியும் மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மதிவேந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சென்னை : தமிழகத்தின் திருத்தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு வருகை புரியும் மக்களுக்காக தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் மட்டும் வளர்ச்சி பணிகள் குறித்து தமிழ்நாடு சுற்றுலா துறை தலைமை அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இக்கூட்டத்தில் சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், சுற்றுலா மற்றும் மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!