உலக பொதுமறை திருக்குறள் பாடமாகிறது : சென்னை பல்கலைக்கழகம் அறிமுகம்

உலக பொதுமறை திருக்குறள் பாடமாகிறது : சென்னை பல்கலைக்கழகம் அறிமுகம்
X

திருக்குறள் எழுதிய திருவள்ளுவர்.

உலக பொது மறை என்று தமிழில் புனிதமாக கருதப்படும் திருக்குறளை பாடமாக சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தவுள்ளது.

உலகப் பொதுமறை நூலான திருக்குறளைப் பாடமாக சென்னை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தொழில் தர்மத்திற்கான திருக்குறள்" என்ற பெயரில் நடப்பு கல்வியாண்டில் பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை மாணவர்களுக்குத் திருக்குறள் பாடமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு தமிழ் மொழி பற்றாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் இலக்கியத்தில் உள்ள திருக்குறள் உலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி