ஒரு மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் மீண்டும் திறப்பு -குடிமகன்கள் உற்சாகம்..!

ஒரு மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் மீண்டும் திறப்பு -குடிமகன்கள் உற்சாகம்..!
X
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த மே 10 ஆம் தேதி முதல் மூடப்பட்டது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் விற்பனை தமிழகத்தில் அதிகரித்தது.மேலும் ஆந்திரா,கர்நாடகம் மாநிலங்களில் மதுபானங்கள் அதிகளவில் கடத்தி வரப்பட்டு கள்ளசந்தையில் ரூ.120 மதிப்புடைய குவாட்டார் பாட்டில்கள் ரூ.750 வரையில் அதிகவிலைக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தொற்று குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊடரங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் வருகிற 14ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தொற்று காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் ஒருமாதத்திற்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் திறக்கப்பட உள்ளதால் குடிமகன்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!