தமிழகத்தில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!
X
தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் பகுதியான 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் வரும் 14ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் மக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து பெற்று செல்லுமாறும், நெகிழி (பிளாஸ்டிக்) பைகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேநீர் கடைகளில் அருகே நின்று அருந்த அனுமதிஇல்லை. கூட்டம் கூடுவதை தவிர்கக வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் பேக்கரிகள் உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல் இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 மணி முதல் 2 மணி வரை இயங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!