தமிழகத்தில் 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை உள்ளது: சுகாதார செயலாளர்

தமிழகத்தில் 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை உள்ளது: சுகாதார செயலாளர்
X

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை உள்ளதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 2ம் அலை கொரோனா தாக்கத்தால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக்சிஜன் செறிவூட்டு இயந்திரங்களும் வாங்கப்பெற்று செயல்படுத்தப்படுகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு கம்பெனிகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சுகாதாரத்துறை செயலாளர் முதன்மை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை இருக்கிறது. மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலத்தில் ஆக்சிஜன் கொண்டு வர நடவடிக்கை எடுத்து இருக்கிறது தமிழக அரசு. இதற்காக தொழில்துறை உடன் இணைந்து பணிகள் நடக்கிறது. அதிகாரிகள் கண்காணிப்பு செய்கிறோம் என்று கூறினார்.

Tags

Next Story