தமிழகத்தில் +2 தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்: சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நேரில் சந்தித்து தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வரிடம் பேசி உள்ளோம், ஜனாதிபதி நல்ல முடிவெடுப்பார் என்று முதல்வர் கூறினார். காங்கிரஸ் 7 பேர் விடுதலையை எதிர்ப்பது பற்றி கண்டு கொள்ள வேண்டாம்.
மாணவர்களின் நலன் கருதி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாகவும் பேசியிருக்கிறோம். நல்ல முடிவு எடுப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். பிளஸ் 2 தேர்வு மட்டுமன்றி மற்ற அனைத்து தேர்வுகளும் மாணவர்களின் நலன் கருதி ஒத்திவைக்க வேண்டும்,
தி பேமிலி மேன்2 சீரியலை ஹிந்தி மொழியில் வெளிவந்தது. வேண்டுமென்றே அவமதிப்பதாக செய்கிறார்கள். முதல்வரை நேரில் சந்தித்தது மிகவும் பெருமையான ஒரு சந்திப்பாக இருந்தது.
இந்த சந்திப்புக்கு வேறொரு காரணமும் உண்டு. என்னுடைய தந்தை இறந்ததற்கு ஒரு முதல்வராக அறிக்கை விட்டிருந்தார். அதோடு அவர் விட்டு இருக்கலாம். தொலைபேசியில் அழைத்து எனக்கு ஆறுதல் கூறியது மனதுக்கு இதமாக இருந்தது. 7 பேர் விடுதலையில் நாங்கள் எப்படி உறுதியாக இருக்கிறோமே அதேபோன்று முதல்வரும் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu