அதிக விலைக்கு காய்கறிகள் விற்றால் கடும் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை!

அதிக விலைக்கு காய்கறிகள் விற்றால் கடும் நடவடிக்கை -  அரசு எச்சரிக்கை!
X

காய்கறி விற்பனை கோப்பு காட்சி.

தமிழகத்தில் கூடுதல் விலைக்கு காறிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுவதால் காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண்டும் செயல் எனவும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட காய்கறி விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!