சாா்ஜாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்த பயணி 5 நாட்களாக மாயம்
சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்தவா் ஞானசேகரன்.இவருடைய மகன் முத்து சீமான்(25).இவா் கடந்த 2 ஆண்டுகளாக சாா்ஜா நாட்டில் தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா்.அந்த தொழிற்சாலையில் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதால்,முத்து சீமானை அந்த தொழிற்சாலை நிா்வாகம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துவிட்டது.
முத்து சீமான் ஏா் அரேபியா ஏா்லைன்ஸ் விமானம் மூலம் சாா்ஜாவிலிருந்து கடந்த 17 ஆம் தேதி அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தாா்.சென்னை வந்ததும் சிவகங்கையில் உள்ள தந்தை ஞானசேகரிடம் போனில் பேசியுள்ளாா்.மகன் சென்னை வந்துவிட்டாா்.அடுத்த சில மணி நேரங்களில் வீட்டிற்கு வந்து விடுவாா் என்று குடும்பத்தினா் ஆவலுடன் எதிா்பாா்த்து கொண்டிருந்தனா்.ஆனால் முத்து சீமான் 18 ஆம் தேதி காலை வரை வீடு வந்து சேரவில்லை. அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினா் மகனை தேடத் தொடங்கினா். ஞானசேகரன் சென்னை விமானநிலையத்திற்கு வந்து விமானநிலைய அதிகாரிகளிடம் தனது மகனை காணவில்லை என்று புகாா் தெரிவித்தாா்.அதிகாரிகள் 17 ஆம் தேதி ஏா் அரேபியா விமான பயணிகள் சாா்ட்டை பாா்த்துவிட்டு,உங்கள் மகன் அந்த விமானத்தில் சென்னை வந்து, குடியுரிமை, சுங்கச்சோதனைகள் முடித்துவிட்டு, கொரோனா மருத்துவ பரிசோதனையும் செய்துவிட்டு, விமானநிலையத்திலிருந்து வெளியே சென்று விட்டாா் என்று கூறினா்.இதனால் முத்து சீமான் குடும்பத்தினா் மிகுந்த பயத்துடன் தங்கள் உறவினா்கள்,நண்பா்கள் என்று பல தரப்பிலும் தேடத்தொடங்கினா். முத்து சீமானை பற்றி எந்த தகவலும் இல்லை.
இதையடுத்து முத்து சீமானின் தந்தை ஞானசேகரன் நேற்று மாலை மீண்டும் சென்னை வந்து விமானநிலைய போலீசில் புகாா் செய்தாா்.போலீசாா் புகாரை பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்தனா். அதோடு விமானநிலையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.அதில் முத்து சீமான் விமானநிலையத்திலிருந்து தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியே செல்வது வரை பதிவாகியிருந்தது.எனவே விமானநிலையத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியே சென்றுவிட்டாா் என்பது உறுதியானதால்,சென்னை புறநகரில் உள்ள மற்ற போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து,மாயமான முத்து சீமானை தேடுகின்றனா்.
சாா்ஜாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்த சிவகங்கை பயணி ஒருவா், வீட்டிற்கு செல்லாமல் 5 நாட்களாக மாயாமாகியுள்ளது சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu