சென்னை விமானநிலையத்தில் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்: 6 பேர் கைது

சென்னை விமானநிலையத்தில் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்: 6 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.

சென்னை விமானநிலையத்தில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் எடுத்து வந்த 6 பேரை கைது செய்துள்ளனர்.

துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக ஹைதராபாத் செல்லவிருந்தது.

இதையடுத்து ஊழியர்கள் விமானத்தை சுத்தப்படுத்தினா். அப்போது அந்த விமானத்தின் ஒரு சீட்டிற்கு அடியில் 6 தங்கக் கட்டிகள் அடங்கிய பாா்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.

உடனடியாக விமான ஊழியர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அதை கைப்பற்றி விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள் அந்த தங்கக்கட்டிகளை ஆய்வு செய்தனா். 6 தங்கக்கட்டிகள் 700 கிராம் எடையுடையது. அதன் மதிப்பு ரூ.31 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, தங்க கட்டிகளை விமான இருக்கைக்குள் மறைத்து வைத்துவிட்டு தப்பி ஓடிய ஆசாமி கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் துபாயிலிருந்து ஃபிளை துபாய் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த 5 பயணிகள் ஒரே குழுவாக வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடமைகளை சோதனையிட்டனர். உடைமைகள் எதுவுமில்லை. பின்பு 5 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனையிட்ட போது அவர்கள் உள்ளாடைகளுக்குள் 24 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தனா். அதன் மொத்த எடை 1.5 கிலோ, மதிப்பு ரூ.65 லட்சம். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க பெருமளவு கணக்கில் இல்லாத பணம் கடத்தப்படுவதாக, பெங்களூரில் உள்ள DRI அதிகாரிகள் சென்னை விமானநிலைய சுங்கத்துறைக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து சுங்கத்துறையினா் பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனா். அப்போது மகராஷ்டிரா மாநிலத்தை சோ்ந்த ஹரீஸ் ஹங்வாணி (52) என்ற ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டதில் அவருடைய சூட்கேஸ்சில் ரகசிய அறைக்குள் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து ரூ.46 லட்சம் மதிப்புடைய பணத்தை பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து சுங்கத்துறை நடத்திய சோதனைகளில் ரூ. 1.42 கோடி மதிப்புடைய தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!