உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்த 1.34 கிலோ தங்க பேஸ்ட் பறிமுதல்

உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்த  1.34 கிலோ தங்க பேஸ்ட் பறிமுதல்
X
பெண் பயணி உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த தங்க பேஸ்ட்
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த 1.34 கிலோ தங்க பேஸ்ட்டை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாய் நாட்டிலிருந்து எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் கேரள மாநிலம் கொச்சியை சோ்ந்த ஒரு இளம் பெண்,தனது உள்ளாடைக்குள் தங்க பேஸ்ட்டை மறைத்து வைத்து எடுத்து வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினா்,சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து சுங்கத்துறையினா் அந்த விமானத்தில் வந்த பெண் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனா்.அப்போது கேரளா மாநிலத்தை சோ்ந்த 28 வயது பெண் பயணி தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி,கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றாா்.

அவரை பெண் சுங்கத்துறையினா் சந்தேகத்தில் நிறுத்தி விசாரித்தனா்.அதோடு அவரை தனி அறைக்கு அழைத்து சென்று,முழுமையாக சோதனையிட்டனா்.அவருடைய உள்ளாடைக்குள் 2 தங்க பேஸ்ட் உருண்டைகளை மறைத்து வைத்திருந்தாா்.அவைகளின் எடை 1.34 கிலோ.சா்வதேச மதிப்பு ரூ.65 லட்சம்.

இதையடுத்து சுங்கத்துறையினா் கேரளா இளம் பெண் பயணியை கைது செய்து தங்க பேஸ்ட் உருண்டைகளையும் கைப்பற்றி மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!