பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை முழுமையாக வழங்கப்படும்: அமைச்சர் கயல்விழி

பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை  முழுமையாக வழங்கப்படும்: அமைச்சர் கயல்விழி
X
மத்திய அரசின் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை வரும் கல்வியாண்டில் முழுமையாக வழங்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை வரும் கல்வியாண்டில் முழுமையாக வழங்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார். முன்னதாக, முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் 35வது நினைவு தினம் தமிழ்நாடு அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாடு அரசின் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வரும் கல்வியாண்டில் முழுமையாக வழங்கப்படும். மத்திய அரசின் தொகையை சரியாக கடந்த அதிமுக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பி வைத்தது, ஆனால் புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, மத்திய அரசு வழங்கும் தொகை முழுமையாக அந்த மாணவர்களுக்கு பயன்படுத்தப்படும். உண்டு, உறைவிட பள்ளியில் காலியாக உள்ள வாடர்ன் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!