குழந்தைகளுக்கான ரூ.5 லட்சம் வைப்புநிதி திட்டம்; தமிழக முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

குழந்தைகளுக்கான ரூ.5 லட்சம் வைப்புநிதி திட்டம்; தமிழக முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கான ரூ.5 லட்சம் வைப்பு நிதி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும் என்றும் அண்மையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நிகழ்வில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் என வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!