தமிழ்நாடு மின்வாரிய தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்

தமிழ்நாடு மின்வாரிய தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்
X
ராஜேஷ் லக்கானி
தமிழக மின்வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

இந்தப் பொறுப்பில் ஏற்கெனவே பணியாற்றி வந்த பங்கஜ் குமார் பன்சாலுக்குப் பதிலாக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai future project