தமிழகத்தில் எங்கெல்லாம் நாளை மழை பெய்யும், வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் எங்கெல்லாம் நாளை மழை  பெய்யும், வானிலை ஆய்வு மையம் தகவல்
X

தமிழக வானிலை நிலவரம் (பைல் படம்)

தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டம், எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பது குறித்து வானி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாள்: 17.07.2021 நேரம்: 1245 மணி

தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்

17.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18.07.2021: நீலகிரி, கோயமுத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில லேசான மழை பெய்யக்கூடும்.

19.07.2021: கோயமுத்தூர், தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

20.07.2021, 21.07.2021: கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

மதுராந்தகம் (செங்கல்பட்டு), திருத்தணி (திருவள்ளூர்) தலா 9, DGP அலுவலகம் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), செய்யார் (திருவண்ணாமலை), திருத்தணி PTO (திருவள்ளூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), Goodwill school வில்லிவாக்கம் (திருவள்ளூர்) தலா 8, பெரம்பூர் (சென்னை), பூண்டி (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சின்னக்கல்லார் (கோவை), மரக்காணம் (விழுப்புரம்), சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு) தலா 7, திண்டிவனம் (விழுப்புரம்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சென்னை நுங்கம்பாக்கம், பூவிருந்தவல்லி (திருவள்ளூர்) , கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) தலா 6.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

வங்க கடல் பகுதிகள்:

18.07.2021 முதல் 21.07.2021 வரை: தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20.07.2021 21.07.2021: மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

17.07.2021, 18.07.2021 வரை: கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

17.07.2021 முதல் 21.07.2021 வரை: கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

17.07.2021 முதல் 21.07.2021 வரை: தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

17.07.2021: வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story