உதயநிதி ஸ்டாலின் தொகுதிக்கு ஜெர்மனி தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால்
பைல் படம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில், ரூ. 40 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணி மற்றும் ஜெர்மன் தொழில்நுட்பத்திலான திட்ட அறிக்கையை மாநகராட்சி தயாரித்து வருகிறது.
ஜெர்மன் தொழில்நுட்பத்தில் சாலை மட்டத்தில் 4 அடி ஆழம், 19 அடி நீளம்,3.4 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டப்படும். பள்ளத்திற்குள், 6 முதல் 10 எம்எம் கன அளவுள்ள பொடி ஜல்லி கற்கள், 1.5 செ.மீ., உயரத்திற்கு நிரப்பப்படும். அதன் மேல், 400 ஜிஎஸ்எம் அடர்த்தி கொண்ட ஜியோ பில்டர் 'பேப்ரிக் கிளாத்' விரிக்கப்படும். பிறகு, ஜெர்மன் தயாரிப்பான, 'பாலிபுரோபோலின்' எனும் பிளாஸ்டிக்கால் ஆன, 3.9 அடி நீளம், 500 மி.மீ., உயரம், 80 மி.மீ., அகலமுள்ள டனல் வைக்கப்படும்.
இப்பணி நிறைவுக்கு பிறகு 20 அடி நீளத்திற்கு மட்டும் ஐந்து டனல் வைக்கப்படும். அதன் மேல், மீண்டும் ஜியோ பில்டர் பேப்ரிங் கிளாத் போர்த்தப்பட்டு, டனல் மூடப்படும். பக்கவாட்டில் உள்ள பள்ளங்களில், 20 எம்எம் ஜல்லி, டனல் உயரத்திற்கு கொட்டி, இடைவெளிகள் அடைக்கப்படும்.
அதன் மேல், சாலை மட்டத்திற்கு கிராவல் கல் பதிக்கப்பட்டு, அதன் இடைவெளியில் மணல் கொட்டி புற்கள் வளர்க்கப்படும். இதனால், வடிகாலுக்கு செல்லும் மழைநீர், சகதிகள் வடிகட்டப்பட்டு, சுத்தமான நீராக குளங்களுக்குச் செல்லும்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக உதயநிதி ஸ்டாலின் இருப்பதால் அதிகாரிகள் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu