கோவை புறப்பட்டார் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்
5 நாள் சுற்று பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று சென்னையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்தினை திறந்து வைத்தார். தற்போது ஊட்டி செல்லும் அவரை வழியனுப்ப தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் விமான நிலையத்திற்கு வந்து குடியரசு தலைவரை வழியனுப்பி வைத்தனர்.
ஆளுநர் மாளிகையில் இருந்து விமான நிலையம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.குடியரசு தலைவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை செல்கிறார்.
கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி சென்று, அங்கு உள்ள ராஜ் பவனில் தங்குகிறார். அதனை தொடர்ந்து நாளை காலை விலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் கல்லூரியில் பயிற்சி பெறும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
அதனை தொடர்ந்து ஊட்டியில் உள்ள பின்னர் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று அங்கு உள்ள மக்களை சந்தித்து பேசுகிறார்.
பின்னர் ஊட்டி தேயிலை தொழிற்சாலையினை பார்வையிடுகிறார். இறுதியாக 6ம் தேதி காலை 10.30 மணிக்கு கோவையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
கொரோனா காலகட்டம் என்பதால் ஊட்டியில் குடியரசு தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் வருகையையொட்டி ஊட்டியில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu