முடங்கிய இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத்தொடங்கியது!

முடங்கிய இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத்தொடங்கியது!
X
ஒரே நேரத்தில லட்சக்கணக்கானோர் அனுகியதால் முடங்கிய இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத்தொடங்கியது,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிக்கு செல்போன் இ-பதிவு பெற்று செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பலர் இ-பதிவு பெற்று வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், உயிரிழப்புகளை குறைக்கவும் தமிழக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

வழக்கமாக தமிழக அரசின் இ-பதிவு இணையதளத்தை 6 லட்சம் பேர் வரை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் தரவுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் தமிழக அரசின் இ-பதிவு இணைய தளத்தை அணுகியுள்ளனர்.

இதனால் இணையதளம் முடங்கி இருப்பதாகவும் அதனை சரி செய்யக்கூடிய பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இன்று மாலைக்குள் இணையதளம் சரி செய்யப்படும் என தெரிவித்தார் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை என்று இ - பதிவு இணையதளத்தை பயன்படுத்தி வெளியே வர முயற்சிக்க கூடாது என வேண்டுகோள் விடுத்தார்

இந்தநிலையில் இ-பதிவு இணையதளம் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி சேவைகளை பெறலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!