காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க குழுக்கள் அமைப்பு: சுற்றுச்சூழல் அமைச்சர் தகவல்
காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுப்பது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்களைக் கொண்ட ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து ஆற்று நீர் மாசடைவதாக மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் நீர் தொழில் நுட்ப பிரிவு, இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவற்றின் நிதி உதவியுடன். சென்னை ஐஐடி குழு நடத்திய ஆய்வில் தெரிய வருகிறது. இதற்கிடையில், ஈரோடு. குமாரபாளையம், பள்ளிப்பாளையம், கரூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் இயங்கிவரும். சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் ஏதும் காவிரி மற்றும் அதன் உபநதிகளில் வெளியேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் அடங்கிய 5 குழுக்கள் 06.10.2021 அன்று அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுக்கள், மேற்கூறிய பகுதிகளில் இயங்கும் சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து. அவைகளிலிருந்து கழிவு நீர் எதும் காவிரி மற்றும் அதன் உபநதிகளில் வெளியேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்டறிந்து வருகின்றன. மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர்களால், காவிரி ஆற்றில், சென்னை ஐ.ஐ.டி நிபுணர் குழு கூறியுள்ள, மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரை உள்ள பல்வேறு இடங்களில் 09.10.2021 அன்று நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் கலக்கும் உயர் உலோகங்கள், பூச்சிக்கொல்லி, மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றால், காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு. சென்னை ஐ.ஐ.டி நிபுணர் குழு மற்றும் பல்வேறு வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெறவும் நடவடிக்கைகள்
மேலும், மேற்கூறிய குழுக்களின் ஆய்வறிக்கையின்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தொடந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu