சென்னையில் அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூல்

சென்னையில் அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூல்
X

கோப்பு படம்

மழை பாதிப்பு குறைந்ததை அடுத்து, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்தது.

கடந்த வாரம் சென்னையை வடகிழக்கு பருவமழை புரட்டிப் போட்டது. நகரமே வெள்ளத்தில் தத்தளித்தால், மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். அதுமட்மின்றி, ஏழை மக்களின் நலன் கருதி, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முதல் மீண்டும் உணவுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் மழை பாதிப்பு குறைந்து, வெள்ளம் வடிந்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதால், இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!