/* */

தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு வழிகாட்டி நூல்: ஆசிரியர் குழுவுக்கு பாராட்டு

இந்த புத்தகம் உருவாக காரணமாக இருந்த 67 ஆசிரியர்களுக்கு பாராட்டும் மற்றும் நற்சான்றிதழ் அமைச்சர் வழங்கினார்

HIGHLIGHTS

தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு வழிகாட்டி நூல்:  ஆசிரியர் குழுவுக்கு  பாராட்டு
X

தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு புத்தகம் தயாரித்த ஆசிரியர் குழுவினருக்கு கல்வி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்

தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு புத்தகம் தயாரித்த ஆசிரியர் குழுவினருக்கு கல்வி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலப்பட்டி பட்டதாரி ஆசிரியர். மகேஸ்வரன் தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு புத்தகம் உருவாக காரணமாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

மத்திய அரசின் என் எம் எம் எஸ் மற்றும் என் டி எஸ் இ உள்ளிட்ட கல்வி உதவித்தொகைக்கான தேர்வை அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட திறனறி புத்தகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் சார்பில் புதுமை திட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவர்கள் என் எம் எம் எஸ் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வுக்கு தயாராகும் வகையில் வழிகாட்டி புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நூலை வெளியிட்டு , மத்திய அரசின் என் எம் எம் எஸ் மற்றும் என் டி எஸ் சி உட்பட கல்வி தொகைக்கான தகுதி தேர்வு குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இத்தகைய வழிகாட்டி கையேடுகள் மாணவர்கள் தேர்வில் எளிதாக வெற்றி பெற உதவியாக இருக்கும் என்றார்.

இந்த புத்தகம் உருவாக காரணமாக இருந்த 67 ஆசிரியர்களுக்கு பாராட்டும் மற்றும் நற்சான்றிதழ் அமைச்சர் வழங்கினார் .இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலப்பட்டி பட்டதாரி ஆசிரியர். மகேஸ்வரன், விராச்சிலை மெய்யப்பச் செட்டியார் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் .முகேஷ் உள்ளிட்டோருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.அரிமா தலைவர் கணேஷ் "புதுமைப்படைப்பு" அமைப்பு கடலாடி ஒன்றிய நிர்வாகி மோகன், ஹரிகிருஷ்ணன், செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Oct 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  4. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  5. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  8. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  9. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  10. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!