சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பில் படிப்புக்கள்: பதிவாளர் உத்தரவு
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லுாரிகளில், வரும் கல்வியாண்டு முதல் முழு நேர, பகுதி நேர எம்பில் படிப்பு ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) அனைத்து பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லுாரிகள், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 'சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் இருந்து முழு நேர மற்றும் பகுதி நேர எம்பில் படிப்புகள் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சென்னைப் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லுாரிகள், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும். இந்தக் கல்வியாண்டில் இருந்து எந்தவொரு கல்லுாரியும் எம்பில் சேர்க்கையை அனுமதிக்கவோ ஊக்குவிக்கவோ கூடாது.
கடந்த ஆண்டுகளில் எம்பில் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் அவர்களின் படிப்பை முடித்துக் கொள்ளலாம். எனினும் அதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ள குறிப்பிட்ட காலக்கெடுவில் படிப்பை முடிக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu