மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா - தலைமை செயலர் ஆலோசனை

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா - தலைமை செயலர் ஆலோசனை
X
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா நடத்துவது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டபேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனால் அதிக பெரும்பான்மையுடன் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மே7 ஆம் தேதி பதவியேற்பார் என அறிவிப்பு வெளியானது.

முன்னதாக எளிமையான முறையில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பதவியேற்பு விழா தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காவல்துறை தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!