மைதிலி சிவராமனின் மறைவு மிகப்பெரிய இழப்பு - மு.க.ஸ்டாலின் இரங்கல்

மைதிலி சிவராமனின் மறைவு மிகப்பெரிய இழப்பு - மு.க.ஸ்டாலின் இரங்கல்
X

மறைந்த மைதிலி சிவராமன்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமனின் மறைவு மிகப்பெரிய இழப்பு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், உரிமைக்காகவும் அயராது குரல் கொடுத்து புரட்சி பெண்ணாக திகழ்ந்தவர் மைதிலி சிவராமன்.

கீழ்வெண்மணி துயரத்தை அந்த கிராமத்திற்கே நேரில் சென்று விசாரித்து நீண்ட தொடர் கட்டுரையாக எழுதியவர். தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு எதிராக போராடி நீதி கிடைத்திட உழைத்தவர் மைதிலி சிவராமன். அவரது மறைவு தமிழகத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி