மதுரை ஆதீனம் மறைவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மதுரை ஆதீனம் மறைவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
X

பைல் படம்

உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நேற்று இரவு காலமானார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் :

ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுச் செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Tags

Next Story
ai and business intelligence