தமிழக அரசு வழங்கிய பரிசுத்தொகையை கட்சிக்கு வழங்கிய மதுக்கூர் ராமலிங்கம்

Madukkur Ramalingam
X

Madukkur ராமலிங்கம்-மதுக்கூர் ராமலிங்கம்

Madukkur Ramalingam-தனக்கு வழங்கப்பட்ட 2 லட்ச ரூபாய் காசோலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்குவதாக தெரிவித்தார்

Madukkur Ramalingam-தமிழக அரசு வழங்கிய பரிசுத்தொகையை மதுக்கூர் ராமலிங்கம் கட்சிக்கு வழங்கினார்

பொதுவுடமைக் கொள்கையை திசை எட்டும் சேர்த்த சிங்காரவேலர் விருதை பெற்றுக் கொண்ட தீக்கதிர் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான மதுக்கூர் ராமலிங்கம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனக்கு வழங்கப்பட்ட 2 லட்ச ரூபாய் காசோலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்குவதாக தெரிவித்தார்.தோழர் சிங்காரவேலர் பெயரிலான விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கக்கூடியது என்றும் அவர் கூறினார்.

விருது பெற்றவர்கள் விவரம்: திருவள்ளுவர் விருதை மு.மீனாட்சி சுந்தரனார் மனைவி வசந்தா, தந்தைப் பெரியார் விருதை எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, டாக்டர் அம்பேத்கர் விருதை நீதிபதி சந்துரு, பேரறிஞர் அண்ணா பெயரிலான விருதை நாஞ்சில் சம்பத், பெருந்தலைவர் காமராஜர் விருதை குமரி ஆனந்தன், மகாகவி பாரதி விருதை பாரதி கிருஷ்ணக்குமார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதை புலவர் செந்தலை கவுதமன், கி.ஆ.பெ.விசுவநாதன் விருது தமிழாய்வு வேந்தர் மா.ராசேந்திரன், கம்பர் விருதை பாரதி பாஸ்கர், சொல்லின் செல்வர் விருதை சூரியா சேவியர்.

ஜி.யு.போப் விருது அ.சு.பன்னீர்செல்வம், உமறுப்புலவர் விருதை மதுரை நா.மம்முது, இளங்கோவடிகள் நெல்லை கண்ணன், ஞாயிறு பாவாணர் விருதை முனைவர் கு.அரசேந்திரன், பொதுவுடமைக் கொள்கையை திசை எட்டும் சேர்த்த சிங்காரவேலர் விருதை தினசரி தீக்கதிர் மூலமாக அதே பணியைச் செய்து வரும் மதுக்கூர் ராமலிங்கம், மறைமலையடிகள் விருதை சுகி சிவம், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருதை முனைவர் இரா.சஞ்சீவிராயர், அயோத்திதாசப் பண்டிதர் விருதை ஞான அலாய்சிஸ், முதலமைச்சர் கணினித் தமிழ் விருதை கணினியில் முனைப்பாகச் செயல்படும் முனைவர் தனலட்சுமி, சி.பா.ஆதித்தனார் விருதை படித்தவர்களுக்கும் புதிய சிந்தனைகளை உருவாக்கி வரும் உயிர்மை இதழ் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன், தமிழ்த்தாய் பெயரிலான விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகி முனியாண்டி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story