கொங்குநாடு என்பது விஷமத்தனமான சிந்தனை : அதிமுக கே.பி.முனுசாமி கண்டனம்

கொங்குநாடு என்பது விஷமத்தனமான சிந்தனை : அதிமுக கே.பி.முனுசாமி கண்டனம்
X

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி

கொங்குநாடு என்பது விஷமத்தனமான சிந்தனை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: கொங்குநாடு என்பது விஷமத்தனமான சிந்தனை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொங்குநாடு என்ற பிரிவினை வந்தால் தமிழ்நாட்டின் அமைதி பாதிக்கும். கொங்குநாடு என்ற சிந்தனை நாட்டிற்கு நல்லதல்ல. யாரையோ சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக பாஜகவினர் கொங்குநாடு என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த கருத்தை யார் முன்னிறுத்தி இருந்தாலும் அவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அறிவியல் உலகத்தில் இன்று உலகமே கைக்குள் வந்துவிட்டது. பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவை சிறப்பாக இருக்க நாடு பலமாக இருக்க வேண்டும். சிறு, சிறு மாநிலங்களாக இருக்கும் போது நாட்டின் பலம் குறையும் என்றும் தனிநபர் கொடுக்கும் கருத்துக்கு நாம் முக்கியத்துவம் தர தேவையில்லை என்றும் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!