கருணாநிதி பெயரில் டிஜிட்டல் மையம்; நவீனமயமாகும் ஆன்லைன் கல்வி

கருணாநிதி பெயரில் டிஜிட்டல் மையம்; நவீனமயமாகும் ஆன்லைன் கல்வி
X

பைல் படம்

ஆன்லைன் கல்வியை நவீனமாக்க சென்னை பல்கலைகழகத்தில் டிஜிட்டல் மையம் அமைக்கப்படவுள்ளதாக துணைவேந்தர் கவுரி தெரிவித்துள்ளார்.

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' கல்வியை நவீனமயமாக்கும் வகையில் ரூ.6 கோடி மதிப்பில் சென்னை பல்கலைகழகத்தில் டிஜிட்டல் மையம் அமைக்கப்பட உள்ளதாக துணைவேந்தர் கவுரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணைவேந்தர் கவுரி கூறுகையில், சென்னை பல்கலைகழகம் அதன் ஐந்து இணைப்பு கல்லுாரிகளிலும், பாதுகாப்பு துறை தொடர்பான படிப்பு நடத்தப்படுகிறது.

கல்லுாரி மாணவர்களுக்கான அனைத்து ஆன்லைன் பாடங்களையும், தமிழில் கொண்டு வர முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி மூலம் தொல்காப்பியம் என்ற திட்டத்தில் தொல்காப்பியம் குறித்த வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

பள்ளி முதல் பல்கலைகழகம் வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் கல்வியை நவீனப்படுத்தும் வகையில், பல்வகை ஊடக ஆராய்ச்சி மையம் என்ற டிஜிட்டல் மையம் ரூ. 6 கோடி மதிப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் அமைக்கப்பட இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!