சென்னையில் அப்துல்கலாம் அறக்கட்டளை நிறுவனர் பேட்டி
அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் பேட்டி அளித்தார்.
அப்துல்கலாம் அறக்கட்டளை நிறுவனர் அர்ஜுனன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
கடந்த 6வருடங்களாக மாணவர்களுக்கான கல்வி உதவி அதாவது 10ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரையிலான ஊக்கத்தொகையை எங்களது அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறோம்.
மாணவர்களுக்கான இலவச கலந்தாய்வும் இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது.மேலும் தொழிற் படிப்புகளுக்கு 10ஆயிரம் ரூபாய்காண காசோலையை நம் அறக்கட்டளை மூலம் கொடுக்க படுகிறது.
கல்விக்கு காசு ஒரு தடையாக இருக்க கூடாது எனபதற்காக தான் என் கல்வி திட்டம் என்ற திட்டத்தை ஆரம்பித்து உள்ளோம்.
வரும் காலங்களில் இலவச கல்வியை கொண்டு வருவதற்கான முயற்சியில் தான் நாங்கள் இறங்கி உள்ளோம் அதற்காக தான் கலாம் கல்வி ஐ.ஏ.எஸ் அறக்கட்டளை துவங்கி உள்ளோம்.
மருத்துவ படிப்பை ஐந்து ஆண்டுகள் படித்து முடித்த பிறகு நீட்டை விட பலமடங்கு இருக்கும் தேர்வை கொண்டு வந்தால் அது அவர்களை மருத்துவர்களாக கொண்டு வருவதில் சரியானது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu