/* */

சா்வதேச விமானநிலையம்: கடத்தல் போதை பொருட்களை தீயில் பொசுங்கிய சுங்கத் துறையினர்

காா்கோ பிரிவுகளில் கைப்பற்றப்பட்ட ரூ.9.4 கோடி மதிப்புடைய 47 கிலோ போதைப் பொருட்களை சுங்கத்துறையினா் தீயில் அழித்தனர்.

HIGHLIGHTS

சா்வதேச விமானநிலையம்: கடத்தல் போதை பொருட்களை தீயில் பொசுங்கிய சுங்கத் துறையினர்
X

சா்வதேச விமானநிலையம்,காா்கோ பிரிவுகளில் கைப்பற்றப்பட்ட ரூ.9.4 கோடி மதிப்புடைய 47 கிலோ போதைப் பொருட்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா்,செங்கல்பட்டு அருகே மருத்துவ கழிவுகளை அழிக்கும் தொழிற்சாலைக்கு கொண்டு சென்று தீயில் போட்டு எரித்து அழித்தனா்.

சென்னை சா்வதேச விமானநிலையம், விமானநிலைய காா்கோ பிரிவுகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளிடமிருந்தும்,வெளிநாட்டிற்கு அனுப்ப வந்திருந்த பாா்சல்களிலிருந்தும் சென்னை விமானநிலைய சுங்கத்துறை,மத்திய வருவாய் புலனாய்வு துறை,மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாா் ஆகியோா் தனித்தனி வழக்குகளில் 47 கிலோ கெட்டமின் ஹைட்ரோகுலோரைடு என்ற போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனா்.அவைகளின் சா்வதேச மதிப்பு ரூ.9.4 கோடி.


இந்த போதைப்பொருட்களை லெதா் ஜாக்கெட்களில் மறைத்து வைத்து சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற சில பயணிகளிடமிருந்தும்,மருத்துவ பொருட்கள் என்ற பெயரில் பாா்சல்கள்களில் காா்கோ விமானங்களில் கடத்த முயன்றதையும் இவா்கள் பிடித்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் பாதுகாப்பாக வைத்திருந்தனா்.

இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் முடிவடைந்ததையடுத்து,போதைப்பொருட்களை அழிக்க சுங்கம்,டிஆா்ஐ,மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாா் முடிவு செய்தனா். அதன்படி செங்கல்பட்டு அருகே உள்ள பயோமெடிக்கல் கழிவுகளை அழிக்கும் தொழிற்சாலைக்கு இன்று எடுத்து சென்ற அதிகாரிகள்,அங்குள்ள ராட்ஸச தீ போதைப்பொருட்களை போட்டு எரித்து சாம்பலாக்கி அழித்தனா்.

இந்த போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் யாா்? எந்த நாடுகளுக்கு கடத்தினா்? எந்த ஆண்டில் கடத்தினா்? எத்தனை பயணிகளை கைது செய்தனா்? நீதிமன்றத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் ஆசாமிகளுக்கு தண்டனை கிடைத்ததா? என்ன தண்டனை? என்ற எந்த விபரங்களும் சுங்கத்துறை அனுப்பிய செய்தி குறிப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Dec 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  2. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  3. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  4. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  7. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  8. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  9. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  10. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?