தீர்த்தபாலீஸ்வரர் கோயில் பாதுகாப்பு பணிகள் : அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

தீர்த்தபாலீஸ்வரர் கோயில் பாதுகாப்பு பணிகள் : அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்  நேரில் ஆய்வு
X

அமைச்சர் சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கோயில் பாதுகாப்பது பணிகளை ஆய்வு செய்தனர்.

தீர்த்தபாலீஸ்வரர் கோயில் பாதுகாப்பு பணிகளை அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தனர்.

சென்னை: திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று (23/06/2021) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடந்த 17/06/2021 அன்று தீர்த்தபாலீஸ்வரர் கோயில் பின்புற மதில் சுவர் வழியாக அடையாளம் தெரியாத சில நபர்கள் கோவில் உண்டியலை களவாட வந்தபோது தடுக்க முயன்ற பணியில் இருந்த ஒப்பந்த நியமன காவலர் பாபு மர்ம நபர்களால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 20/06/2021 அன்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல் துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்களிடம் கேட்டிருந்தார்கள்.

பின்னர் தீர்த்தபாலீஸ்வரர் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளையும் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் இக்கோவிலுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து கோவிலில் ஒப்பந்த நியமனத்தில் பணியாற்றி மரணமடைந்த காவலர் தபாபு அவர்களின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறியதுடன் அவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், சென்னை மண்டலம் 2 இணை ஆணையர் ரேணுகா தேவி, கோவில் செயல் அலுவலர் மற்றும் பகுதி செயலாளர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself