அனைத்து சாதியினருக்கும் கோயில்களில் அர்ச்சகர் பணி அமைச்சர் தகவல்
அமைச்சர் சேகர் பாபு
சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள பழமையான டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடல் அதி நவீன முறையில் செயற்கை புல்வெளி மற்றும் மின் ஒளியுடன் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் எம்பி தயாநிதி நிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு மைதானத்தை திறந்து வைத்தனர்.
இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது எம்பி தயாநிதி மாறன் கூறுகையில், தமிழகத்தில் கிரிக்கெட்டை தவிர பிற விளையாட்டுகளை விளையாடவும் வருங்காலத்தில் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
மத்திய அரசு தற்போது மருத்துவ சேர்க்கையில் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு செய்திருப்பது முதல்வர் ஸ்டாலின் தொடர் வலியுறுத்தல் காரணமாக நடந்தது,
தானாக மனம் உவந்து மருத்து தொகுப்பில் ஒபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி அரசு வழங்கவில்லை.தற்போது வழங்கப்பட்டுள்ள 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு பாஜக காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது காக்கா உக்கார பனம்பழம் விழுந்தது போல என்றும் விமர்சித்தார்.
ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் பாஜகவில் கூட்டணியில் இருந்தும் எதையும் சாதிக்கவில்லை.தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை நீட்டுக்கு ஆதரவானவர் மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து போராட்டம் அறிவித்துள்ள அண்ணாமலை கர்நாடகாவில் இருந்து வந்தவர் தானே அங்கே சென்று போராட்டம் நடத்த முடியுமா என கேள்வி எழுப்பினார்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது உண்மையாக தமிழ் மக்கள் மீது பற்று இருந்தால் கர்நாடக அரசுடன் பேசி மேகதாது அணை விவகாரத்தில் தீர்வு காண வேண்டியது தானே என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதை திமுக வன்மையாக எதிர்க்கிறது என்றும், அதனை கட்டாயமாக அமல்படுத்த விட மாட்டோம் எனவும் கூறினார்.
அமைச்சர் சேகர் பாபு கூறுகையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் திட்டத்தில் திமுக நிலையாக உள்ளது,
அந்தத் திட்டத்தில் பங்குபெற முறையான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும்,அரசு நடத்தும் பயிற்சி கூடங்களில் முறையாக பயின்று தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் படிப்படியாக கோயில்களில் பணி அமர்த்தப்படுவார்கள்.
திருக்கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்த கட்சியினர் ஆக இருந்தாலும்,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், நிலங்கள் மீட்கப்படும்.
.கடந்த சில நாட்களில் ரூ.600 கோடி மதிப்பிலான நிலங்கள் 80 இடங்களில் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu